விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் ராகுல்

டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண் பொருள்கள் விற்பனை சந்தை ஆகியவை தொடர்பான மத்திய அரசின் முடிவை கடுமையாகச் சாடினார்.

பிகாரில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட இயலாத காரணத்தால் விவசாயிகள் அனைவரும் கடும் துயரங்களை எதிர்கொள்வதாகவும் பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டினார்.தொடர்ந்து, மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும். அவர்களது போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளார்.