புதிய வடிவம் எடுத்த டி.பி.எஸ். வங்கிக்கு ரூ.2,500 கோடி மூலதனம்!

புதிதாக உருவெடுத்துள்ள டி.பி.எஸ். இந்தியா வங்கிக்கு சுமார் ரூ.2,500 கோடி மூலதனத்தை அந்த வங்கியின் தலைமை அளித்துள்ளது.

புதிய வங்கியின் சிறப்பான செயல்பாட்டிற்காக சிங்கப்பூரில் உள்ள தலைமையகம், சுமார் ரூ.2,500 கோடி தற்போது மூலதனத்தை அளித்துள்ளது. இதன்மூலம் வங்கியின் ஸ்திரத்தன்மை வலுப்பெற்று வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மேம்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு நடவடிக்கை தொடர்பான நிர்வாகப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் விரைவில் முழுச் சேவையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் எனவும் டி.பி.எஸ். வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. டி.பி.எஸ். வங்கி இந்தியாவில் தனது முதல் கிளையை 1994ஆம் ஆண்டு மும்பை நகரில் தொடங்கியது.