மீண்டும் வருகிறது பப்ஜி – பெற்றோர்கள் அதிர்ச்சி

பப்ஜி என்ற ஒரு வார்த்தை பல பெற்றோரை பல மாதங்கள் கலங்கடித்து வந்தது. மொபைல் போனில் மாணவர்கள் இரவு பகலாக மூழ்கினர்.

இந்நிலையில் கடந்த மாதம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால், நம் நாட்டின் நேர்மைக்கும் இறையாண்மைக்கும் களங்கம் விளைவிப்பதாகக் கூறி பப்ஜி விளையாட்டு தடைச் செய்யப்பட்டது.

தடைச் செய்யப்பட்ட ஒரு சில தினங்களில் பபிஜி நிறுவனம் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில் பப்ஜி நிறுவனம் இனிமேல் இதுப் போன்ற விளையாட்டுகளை அனுமதிக்காது எனத் தெரிவித்தது.

தற்போது பப்ஜி நிறுவனம் இந்தியாவில் தனக்கான பிஸினஸ் பார்ட்னரை தேடி ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், ஏர்டெல் நிறுவனம் இதை எடுத்து நடத்தப் போகிறது என்னும் செய்திகளும் வெளியாகியுள்ளன. இதற்காக வேலைக்கு ஆள் சேர்க்கும் பணிகளும் நடைப்பெறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here