உ.பி. தேர்தலில் பெண்களுக்கு 40% இடம் கொடுக்கப்படும்- பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வரவிருக்கும் உ.பி. சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு மிகப்பெரிய அறிவிப்பை அறிவித்துள்ளார். இதன்மூலம் உ.பி. தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தமுறை உ.பி. தேர்தலில், 40 சதவீத பெண்களுக்கு சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் முக்கிய அறிவிப்பாக கருதப்படுகிறது.

பெண்கள் அரசியலில் சேர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் பெண்களை வலியுறுத்துவதாக பிரியங்கா காந்தி கூறினார். அவர் தேர்தலில் 40 சதவீத இடங்களில் பெண்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம் எனக் கூறினார்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் நாங்கள் விண்ணப்பங்கள் கேட்டுள்ளோம். அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம். தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவரும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு அரசியலில் ஈடுபட வாய்ப்பு கொடுப்போம். அதிகமான அளவில் பெண்கள் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் லக்கிம்பூர் கேரிக்கு செல்லும் போது மிகவும் இருட்டாக இருந்தது. என்னை இரண்டு பெண் காவலர்கள் சீதாபூருக்கு அழைத்துச் சென்றனர். அதிகாலை நான்கு மணி வரை அங்கேயே தங்கியிருந்தார்கள். அங்கிருத்த மூத்த பெண் அதிகாரியின் வயதான தாய் நொய்டாவில் தனியாக வசிக்கிறார். பெண்கள் முன்னேற வேண்டும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி..!