TN Schools: பள்ளிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை

private-schools-should-not-conduct-12th-std-lessons-for-11th-std-students
பள்ளிகளுக்கு அமைச்சர் கடும் எச்சரிக்கை

TN Schools: தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30 ஆம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறும். இதை 9 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31 வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.49 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 5 தொடங்கி மே 28 வரை பொதுத் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை 8.36 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

மாணவர்கள் ஒரு பக்கம் தேர்வுக்கு தயாராகிவரும் நிலையில் சில தனியார் பள்ளிகள் 12ஆம் வகுப்பு பாடத்தை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தையும் படிக்க முடியாமல், பனிரெண்டாம் வகுப்பு பாடத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த விவகாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தெரியவர தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: TN Budget 2022: அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்காக செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000..!