தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை !

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடைபெற்றது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட போது, 2ம் அலையின் காரணமாக மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விமுறை திரும்பியது.

இந்த கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கள் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதனை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் 75 % கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி பள்ளிகள் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் பேருந்து கட்டணம்,சீருடை கட்டணம் இவைகளை வசூலிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.