முகக்கவசம் அணிய தேவையில்லை:இத்தாலி !

mask mandatory
மீண்டும் கட்டாயமாகும் மாஸ்க்

கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

தொற்று குறைந்து வருவதால் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இந்த நடைமுறை ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

மேலும் கொரோனா பரவல் தீவிரமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இதுவரை 52%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தடுப்பூசி மக்களுக்கு போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.