ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று தனது 76-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், தனது பணிவான ஆளுமையால் ஒட்டு மொத்த தேசத்தாலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேசிக்கப்படுகிறார். ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அவரின் முயற்சி போற்றத்தக்கது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் கற்பிக்கும் திட்டம்