எனது உயிருக்கு ஆபத்து.. முதல்வர் உதவ வேண்டும்.. பிரபல இயக்குனர்

தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக உதவ வேண்டும் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமிபத்தில் முத்தையா முரளிதரன் குறித்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின் விஜய் சேதுபதி அப்படத்தில் இருந்து விலகினார்.

இதையடுத்து தற்போது சீனு ராமசாமி இவ்வாறு ட்வீட் செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் தற்போது தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள இவர், விஜய் சேதுபதிக்கு எதிராக நான் செயல்படுவதாக இரவு நேரங்களில் என்னை அச்சுறுத்துகின்றனர்.

ஆனால் விஜய்சேதுபதி ரசிகர்கள் இதை செய்யவில்லை. சில முகம் தெரியாத சக்திகள் இதை செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.