ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்!

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், மார்ச் முதல் கொரோனா ஊரடங்கு பிறக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக, மருத்துவக் குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன், மாதம்தோறும், முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

அதன்படி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், வரும் நவம்பர் மாதம் ஊரடங்கை நீக்கலாமா? அல்லது நீட்டிக்கலாமா? என்பது குறித்து இன்று காலை 10:30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் மூலம் தமிழக முதல்வர், தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்புகளை தெரிவித்துள்ளார். அதில்,

  • தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்தும் திரையரங்குகளை திறப்பது குறித்தும் அரசு ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
  • வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து அதன் மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
  • தமிழ்நாட்டில் கொரோனா குறைந்துள்ள நிலையில், விழிப்புணர்வுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
  • பண்டிகை காலத்தில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.