பப்ஜி மதன் முன் ஜாமீன் கோரி மனு

யூடியூபில் மதன் என்பவர், சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் ‘பப்ஜி’ போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தை மதன் என்னும் யூடியூப் பக்கத்தை ஆரம்பித்து ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன் ஒரு கட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தார். இந்தச் செயல் அவரின் பக்கத்துக்கு அதிக பார்வையாளர்களை இழுத்து வந்தது. அவரின் யூடியூப் பக்கத்தை 7.8 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டில் ஆபாச பேச்சு புகாரில் போலீசாரால் தேடப்படும் மதன் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆன்லைனில் சிறுவர், சிறுமிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்வதாக மதன் மீது குற்றச்சாட்டு உள்ளது.