வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு..!

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.