கொரோனா தடுப்பூசி போடும் முறைகள் – பிரதமர் மோடி !

பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை
பிரதமர் மோடி 26ந் தேதி சென்னை வருகை

கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கவுள்ள நிலையில் அரசியல்வாதிகள் வரிசைமுறையை மீற வேண்டாம் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.

முன்னுரிமை பட்டியலில் ஒரு கோடி மருத்துவப் பணியாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா பணிகளில் 2 கோடி முன்னிலைப் பணியாளர்கள் இருக்கின்றனர், அதாவது போலீஸ், பாதுகாப்பு வீரர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி இலவசமாகப் போடப்படவுள்ளது.

மேலும் 50 வயதுக்கு மேற்பட்டோர் அடுத்த பட்டியலில் உள்ளனர். இதே கட்டத்தில் சர்க்கரை உள்ளிட்ட நீண்ட கால நோய் உள்ள 50 வயதுக்கும் கீழ் உள்ளவர்களுக்குவர்களுக்கும் தடுப்பூசி அளிக்கப்படும்.

தொடக்கத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று கூறிய பிரதமர் மோடி, தடுப்பூசி போடும் நடைமுறை அறிவியல் ரீதியான சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பொய்ச்செய்திகளையும் வதந்திகளையும் யாரும் பரப்ப வேண்டாம் என்று பிரதமர் எச்சரித்தார்.