விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் !

narendra modi
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து மாநிலங்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,புதிய வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் எனவும், விவசாயிகள் போராட்டம் பற்றி விரிவான விவாதம் நடத்தியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம் எனவும் கூறினார்.

விவசாயிகளின் நலன் கருதியே அரசு செயல்படுவதாகவும், சிறு விவசாயிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

வேளாண் பிரச்சனைகளை தீர்க்க, பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.