தமிழகத்தில் 6 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டண உயர்வு நீட்டிப்பு !

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 6 ரயில் நிலையங்களில் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கும் நடைமேடை கட்டண முறை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.மக்கள் கூடுவதை தவிர்க்க ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டது.

கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் காட்பாடி ரயில்நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்கள் வழங்கப்படுகிறது.டிக்கெட் கட்டணம் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கப்பட்டு வருகிறது.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த 6 ரயில் நிலையங்களில் ஒருவருக்கு ரூ.50 என வசூலிக்கும் நடைமேடை கட்டண முறை வரும் செப்டம்பர் 16-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.