மாணவர்களுக்கு நற்செய்தி..10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் !

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அதிகரித்து வந்த நிலையில் மாநில அரசு ஊரடங்கை அறிவித்தது.இதனால் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.தற்போது தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் (4g/5g) வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் டேப்லெட் அரசு செலவில் வழங்கப்படும்.

மேலும் அனைத்துக் கல்வி நிலையங்களிலும் wifi வசதி செய்து கொடுக்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பத்தாம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிப்பதற்கும், பாலியல் தொடர்பான புகார் அளிப்பதற்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அதே எண்ணில் தொடர்பு கொண்டோ, இ-மெயில் மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் டேப்லெட் வழங்கப்படும் என்று கூறினார்.