விலங்குகள் நல உரிமை அமைப்பான பீட்டா இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகள் பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது.மேலும் விலங்குகளை சித்ரவதை செய்ய கூடாது என்று கூறி வருகிறது.
நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை குறி வைத்தது ஆனால் மக்கள் பேராதரவு மூலம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
தற்போது மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உட்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும் என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதி உள்ளது.
இதற்கு பதிலளித்த அமுல் நிறுவனம்,அமுல்நிறுவனத்தின் மூலம்10 கோடி நிலமற்ற பால் உற்பத்தி விவசாயிகள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை பீட்டா வழங்குமா? சோயா பாலின் விலை மிகவும் அதிகம். அந்த பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு கட்டுப்படியாகாது’’ என்று கூறினார்.
கடந்த 75 ஆண்டுகளாக உருவாக்கியுள்ள விவசாயிகளின் வளங்களை பணக்கார வெளிநாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மரபணு மாற்றப்பட்ட சோயாவை அதிக விலைக்கு சந்தைப்படுத்த வேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.



