அடுத்த அதிர்ச்சி..70 சதவீதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதனை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.தடுப்பூசி போடுவதன் மூலம் இதனை கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர்.

தமிழகத்தில் இந்த இரண்டாம் அலையில் வரும் கொரோனா டெல்டா வகை என்று குறிப்பிடப்படுகிறது.மேலும் தமிழகத்தில் சுமார் 70% பேர் டெல்டா வகை கொரோனா பாதிப்பு இருக்கிறது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிக்கபட்ட 554 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 70% பேருக்கு டெல்டா வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 18.9% பேர் , 13-17 வயது வரை 3.4% பேரும், 18-44 வயது வரை 46.1% பேரும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 31.6% பேரும் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.