இம்மாதம் வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை !

இம்மாதம் வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.எனவே மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ஜனவரி மாதத்தில் பண்டிகை நாட்கள் அதிகம் இருப்பதால் விடுமுறை இருக்கும்.இந்த மாதத்தில் வங்கி தொடர்பான எந்த வேலையாவது நீங்கள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் அதனை விரைவாக முடித்துக் கொள்வது காலச்சிறந்தது என பொருளாதார ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின் மார்ச் மாதத்தில் மொத்தம் 9 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். ஆனால் நாளை முதல் அடுத்தடுத்து 5 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் 11 ஆம் தேதி மகா சிவராத்திரி காரணமாக சில வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 13 மற்றும் 14ஆம் தேதிகள் இரண்டாவது சனி, ஞாயிறு என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்கள் ஆகும். மார்ச் 15, 16 தேதிகள் திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை வருகின்றது.

ஆனால், மார்ச் 15 மற்றும் 16ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அன்றைய நாட்களிலும் வங்கிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.