ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி !

Booster vaccine
இன்று முதல் செலுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசி

கரோனா பரவல் தற்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.இந்நிலையில்,45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மத்திய அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.” என்று ஜவடேகர் கூறினார்.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பிலும் பிரகாஷ் ஜவடேகரும் இதை வலியுறுத்தினார். விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, கோவிஷீல்டின் 2 வது டோஸ் 4 மற்றும் 8 வது வாரங்களுக்கு இடையில் எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.