ஐ.நா வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் !

USA - 2000: x 4.8 in / 164x123 mm / 558x419 pixels Image of United Nations building, with U.N. logo. (MCT via Getty Images)

ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46’ஆவது கூட்டத்தில், இன்று போர்க்குற்றம் தொடர்பான விவகாரங்களில் இலங்கை அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி, இலங்கைக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 11 நாடுகளும் வாக்களித்த நிலையில், இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இதையடுத்து, 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.