பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்..!

பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.இதற்காக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 அமர்வுகளாக நடைபெறும். முதல் அமர்வு ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம் தேதி முடியும்.

இரண்டாவது அமர்வு மார்ச் மாதம் 8 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவு பெறும்.

இந்நிலையில், நாடாளுமன்ற கேண்டீன்களில் உணவு வகைக்கு எம்.பி.க்களுக்கும், பிறருக்கும் வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டு விட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.