பள்ளிகளை மீண்டும் திறக்க பெற்றோர்கள் ஆதரவு

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வகுப்புகளை பொங்கல் விடுமுறைக்கு பின் திறக்க 70 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக பள்ளிக்கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.Advertisemen

இதையடுத்து பொங்கல் விடுமுறைக்கு பின்பு 10 மாதம் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரண்டு தினங்கள் பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. அதனடிப்படையில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டு அதனடிப்படையில் தமிழக அரசு ஓரிரு தினங்களில் பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.