இயக்குநர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் ரிலீஸ்

ஜினிகாந்தின் ‘காலா’ பட வெற்றிக்குப் பின்னர் ஆர்யாவின் 30-வது படத்தை இயக்கினார் பா.ரஞ்சித். இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாராவும், கலையரசன், ஜான் கோக்கேன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.ஜி.எப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திரா ராஜு இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல. இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்..ஏறி ஆடு..கபிலா #சார்பட்டா” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யா இத்திரைப்படத்தின் கபிலா என்ற கேரக்டரில் நடித்திருப்பது தெரிய வருகிறது.