உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி சீலக்காரியம்மன் கோயில் அருகே ஒரு கல்லில் 2000 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துகள் கொண்ட கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கண்டறிந்துள்ளார்.
மதுரை அருங்காட்சியக காப்பாளர் மருதுபாண்டியன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வுசெய்து தமிழி எழுத்துகள் அடங்கிய கல்வெட்டு என்பதை உறுதிசெய்துள்ளனர்.மூன்று வரிகள் கொண்ட தமிழி எழுத்துகள் உள்ளதாகவும்.சில இடங்களில் சிதைந்து இருப்பதால் இதை நகல் எடுத்து முழுமையாக ஆய்வுசெய்த பின்னரே கல்வெட்டில் என்ன பொறிக்கப்பட்டுள்ளது தெரியவரும் எனத் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 41ஆவது தமிழி எழுத்து அடங்கிய கல்வெட்டு எனவும், பெரும்பாலும் சமணர்கள் குகைகளில் மட்டுமே காணப்பட்ட தமிழி எழுத்துகள் சமீபகாலமாக பிற இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.தமிழி எழுத்துகளின் தோற்றம் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கால கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார் .



