நம் கூட்டணி மக்களுடன் – கமல்ஹாசன்

நம் கூட்டணி மக்களுடன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளதால் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, ”கூட்டணி என்பது என் வேலை, வெற்றிக்கு எல்லாரும் உழைக்க வேண்டும்: நம் கூட்டணி மக்களுடன்” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.