கல்லூரிகளை திறப்பதா? அல்லது வேண்டாமா? 12ஆம் தேதி அறிவிப்பு

நவம்பர் 16ஆம் தேதி திட்டமிட்டப்படி கல்லூரிகளை திறப்பதா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து வரும் 12ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு நிபந்தனை விதித்துள்ளது. இது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் உயர்கல்வித்துறை குழப்பமடைந்துள்ளது.

மேலும் கல்லூரியில் மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என யு.ஜி.சி-யும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திட்டமிட்டப்படி வரும் 16ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்விக்கு 12ஆம் தேதி பதிலளிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.