தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை

ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போர்க்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தடையை மீறி விளையாடினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.