அமெரிக்காவில் மேலும் 2 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்கலாம் – ஜோ பைடன் பகீர் தகவல்

கரோனா தொற்று குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசிகள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதையும் பகிர்ந்து கொள்ள டிரம்ப் நிர்வாகம் மறுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பைடன்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், தான் அதிபராக பதவி ஏற்பதற்க்குள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டக்கூடும் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.