Education news : மாணவர்கள் கவனத்திற்கு ..10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் !

Education news : மாணவர்கள் கவனத்திற்கு ..10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்
மாணவர்கள் கவனத்திற்கு ..10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

Education news : தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்.இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால்,10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதைத் தவிர்த்து, ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தற்போது கரோனா மூன்றாவது அலை மிக தீவிரமாகப் பரவி வரும் சூழலில், 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மட்டுமே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.Education news

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து, ஆன்லைன் வழியாக மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !