டாஸ்மாக் வசூல்: முதலிடத்தில் மதுரை இரண்டாம் இடத்தில சென்னை..!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 14-ந்தேதி (நேற்று) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடையின் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், பணியாளர்கள் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டது.

நேற்று திறக்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.165 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.நேற்று ஒரே நாளில், மொத்தம் 164 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலேயே, அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 49.96 கோடி ரூபாய் அளவிற்கு மது பானம் விற்பனை நடைபெற்று உள்ளது.

மக்கள் தொகையில் மதுரையை விட அதிக மடங்கு கொண்ட சென்னை மண்டலத்தில் கூட 42.96 கோடி ரூபாய்க்குதான் மது விற்பனை நடைபெற்றது. எனவே, சென்னை மண்டலம் இரண்டாவது இடத்தில் உள்ளது.திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.38.72 கோடிக்கும் என ரூ.164.87 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.