தினமும் ஏன் நாம் நட்ஸ் சாப்பிட வேண்டும் !

தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.என்ன தான் நாம் உணவுகள் சாப்பிட்டாலும் முழு ஊதசத்து அதில் கிடைப்பதில்லை.ஆனால் நட்ஸை உணவில் சேர்த்தால், அது உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது.

வால்நட்ஸில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.இது ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்தது. இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

நட்ஸில் பாதாம், முந்திரி, வால்நட் மற்றும் பிஸ்தா போன்றவற்றில் நல்ல கொலஸ்ட்ராலானது நிறைந்துள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

நட்ஸை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணுவின் தரமானது அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சு பொருட்கள் நீங்கி உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.