Omicron in tamilnadu : தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு !

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

Omicron in tamilnadu :புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.பல ஐரோப்பிய நாடுகள் மிகவும் தொற்றுநோயான புதிய கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்துள்ளன.

ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது என்று தெரிவித்துள்ளனர்.COVID-19 இன் பீட்டா மாறுபாட்டில் காணப்படும் தடுப்பூசி-எதிர்ப்பு மாற்றங்களையும் Omicron மாறுபாடு உள்ளடக்கியது.

ஒமைக்ரான் திரிபு தற்போது 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றனர்.

நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடன் வந்த குடும்ப நபர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.16 வயது குழந்தை உட்பட அந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எல்லோருக்குமே சிறிய அளவிலான பாதிப்பு மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Actor vikram tests covid positive : நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி !

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விக்ரம்.தற்போது விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

ந்த இரண்டாம் அலையில் நடிகர் நடிகைகள் பலவற்றிற்கு கொரோனா தொற்று உறுதியானது.சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. Actor vikram tests covid positive

அந்த வகையில் ,நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு சிறிய அறிகுறியே உள்ளதால் விக்ரம் வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Omicron in tamilnadu : தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு !