Actor vikram tests covid positive : நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி !

Actor vikram tests covid positive : நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி

Actor vikram tests covid positive : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விக்ரம்.தற்போது விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்த இரண்டாம் அலையில் நடிகர் நடிகைகள் பலவற்றிற்கு கொரோனா தொற்று உறுதியானது.சமீபத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. Actor vikram tests covid positive

அந்த வகையில் ,நடிகர் விக்ரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு சிறிய அறிகுறியே உள்ளதால் விக்ரம் வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : marriage age of women from 18 to 21 : பெண்ணின் திருமண வயதை 18 இருந்து 21 ஆக உயர்த்த யோசனை !

பிரதமர் நரேந்திர மோடி தனது 2020 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது திட்டத்தை அறிவித்த ஒரு வருடத்திற்கும் மேலாக, மத்திய அமைச்சரவை புதன்கிழமை பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 இல் அரசாங்கம் ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தும் என்றும், அதன் விளைவாக சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டம், 1955 போன்ற தனிநபர் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டுவரும் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது ( marriage age of women ) 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

Actor vikram tests covid positive : நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று உறுதி !