Omicron: கேரளாவில் முதல்முறையாக ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’

தினசரி கொரோனா பாதிப்பு
தினசரி கொரோனா பாதிப்பு

Omicron: தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியா உள்பட 59 நாடுகளுக்கு பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு ஒமைக்கரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

அவரைத்தொடர்ந்து மராட்டியத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நாக்பூரில் 40 வயது ஆண் ஒருவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கேரள மாநிலம் ஏர்ணாகுளம் வந்த பயணி ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. ( மராட்டியம் – 18, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 3 சண்டிகர் – 1, கேரளா – 1 ).

இதையும் படிங்க: ஆசிரியை கண்டித்ததால் அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை