ஆசிரியை கண்டித்ததால் அரசு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

student died
மாணவியின் விபரீத முடிவு

புதுச்சேரி, பூமியான்பேட் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி ராமுவின் மகள் ஸ்வேதா(15). கதிர்காமம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வாரத்தில் சில நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 9-ம் தேதி மாணவியை அழைத்த பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராத காரணம் கேட்டதோடு, கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த ஸ்வேதா, வீட்டின் கழிவறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். மாலை வீட்டிற்கு சென்ற ஸ்வேதாவின் தாயார் மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: SHe-Box in schools: அரசு பள்ளிகளில் 31-ந்தேதிக்குள் பாலியல் புகார் பெட்டி- பள்ளிக்கல்வித்துறை