Ola Cab Driver Arrested : கடவுச்சொல் விவகாரத்தில் சர்ச்சை: ஓலா கார் ஓட்டுந‌ரால் மென்பொருள் பொறியாளர் கொலை

சென்னை : Ola Cab Driver Arrested : சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் கடவுச்சொல் விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் ஓலா கார் ஓட்டுந‌ரால் மென்பொருள் பொறியாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் காரில் ஏறுவதற்கு முன் ஒரு முறை கடவுச்சொல் (OTP) பதிவிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் 34 வயது மென்பொருள் பொறியாளர், ஓலா கார் ஓட்டுந‌ரால் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இறந்த எச். உமேந்தர், கோவையில் மென்பொருள் பொறியாளராக‌ பணியாற்றி வந்தார். உமேந்தர் தனது மனைவி பவ்யா மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகள், பவ்யாவின் சகோதரி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் நாவலூரில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வாடகைக் காரில் செல்ல முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

தனது அனுமதியின்றி குடும்பத்தினர் காரில் ஏறியதால் ஆத்திரமடைந்த சேலத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் 41 வயது என்.ரவி கடவுச்சொல்லை உறுதி செய்த பிறகு காரில் ஏறச் சொன்னதாக கூறப்படுகிற‌து. இதில் கோபமடைந்த கார் ஓட்டுநர் ரவி, வாகனத்திலிருந்து கீழே இறங்கி வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 7 பேர் இருப்பதால் அதிகம் பேர் அமரக்கூடிய ஒரு எஸ்யூவி காரை முன்பதிவு செய்யுமாறு உமேந்தரிடம் கூறினாராம்.. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிதாகி, ரவி திடீரென தனது செல்போனை எடுத்து உமேந்தரின் தலையில் தாக்கியுள்ளார். தொடர்ந்து உமேந்தர் கீழே விழும்வரை ரவி பலமுறை தாக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் மனைவி கூறுகையில், ரவி அவரை பலமுறை தாக்கிய‌தாகவும், உமேந்தர் மயங்கி விழுந்ததாகவும் கூறியுள்ளார். உமேந்தர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதற்கிடையில், தப்பியோட முயன்று ரவியை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, ரவியை கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.