ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில், அமெரிக்காதான் எதிரி, அணு ஆயுத கப்பல் என்று பதற்றப் பேச்சைத் தொடங்கியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.
வட கொரியாவின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அறிவிக்கும் மாநாட்டில் பேசிய, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்கா தான் எங்களது முக்கிய எதிரி என கூறியுள்ளார், “நமது மிகப்பெரிய எதிரியாகவும், நமது புரட்சிக்கு மிகப்பெரிய தடையாகவும் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும், அந்நாட்டின் அடிப்படை கொள்கை வட கொரியாவுக்கு எதிரானதாகவே உள்ளது. அது மாறப்போவதில்லை” என தெரிவித்தார்.




