சிபிஐ அதிகாரிகள் இனி ஜீன்ஸ் அணியக்கூடாது

சிபிஐ அதிகாரிகள் தங்களது பணி நேரத்தில் ஜீன்ஸ்,  டி-சர்ட் போன்ற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தாடி வளர்க்க கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ இணை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “ ஆண் அதிகாரிகளும் அலுவலா்களும்  பணி நேரத்தில் முறைப்படி காலர் வைத்த சட்டை, பேண்ட், காலணிகள் அணிந்திருக்க வேண்டும்.  மேலும் தாடி வளர்க்கக் கூடாது, தாடியை முழுதாக மழித்திருக்க வேண்டும்.

பெண் அதிகாரிகளும் அலுவலகர்களும்  சேலை, கோட்-சூட் அல்லது முறைப்படி சட்டை, பேண்ட் அணிந்திருக்க வேண்டும். ஜீன்ஸ், டி-சர்ட், விளையாட்டு சூ, செருப்பு போன்றவை அணிந்து அலுவலகத்துக்கு வரக் கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.