டில்லியில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி

தலைநகர் டில்லியில் ஊரடங்கில் இருந்து மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மால்கள், மார்க்கெட்கள் ஆகியவை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க அடிப்படையில் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ ரயில்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:டில்லியில் வணிக வளாகங்கள், மார்க்கெட்கள் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க தேதி அடிப்படையில் செயல்படலாம். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

மின்னணு வணிக நிறுவனங்கள் வீடுகளுக்கே பொருட்களை சென்று வழங்கலாம்.டில்லி மெட்ரோ ரயில், 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.