Afghan Women : ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை

Afghan Women
ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை

Afghan Women : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Telangana government: 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு குட் நியூஸ்..!

Telangana government: தெலுங்கானாவில் 2020-21 கல்வியாண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் 2020-21 கல்வியாண்டில் நடைபெற்ற 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 21-ம் தேதி வெளியானது.https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9292302814398462&output=html&h=165&slotname=5652381116&adk=3084544278&adf=2229638868&pi=t.ma~as.5652381116&w=660&fwrn=4&lmt=1640521729&rafmt=11&psa=1&format=660×165&url=https%3A%2F%2Fnewsnexttamil.wpcomstaging.com%2Ftelangana-government-decides-to-pass-all-11th-students%2F&flash=0&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMC4wLjAiLCJ4ODYiLCIiLCI5Ni4wLjQ2NjQuMTEwIixbXSxudWxsLG51bGwsIjY0Il0.&dt=1640521729179&bpp=11&bdt=2002&idt=12&shv=r20211207&mjsv=m202112060101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dbded921eaec1c990-22ce91c262c50097%3AT%3D1609400309%3ART%3D1609400309%3AS%3DALNI_MY3WUySeVtE8kjQCLyNUYoWFXk6hQ&prev_fmts=0x0&nras=1&correlator=8611008467470&frm=20&pv=1&ga_vid=827620303.1609400308&ga_sid=1640521729&ga_hid=1811160619&ga_fc=1&rplot=4&u_tz=330&u_his=3&u_h=768&u_w=1360&u_ah=728&u_aw=1360&u_cd=24&u_sd=1&dmc=4&adx=192&ady=1316&biw=1343&bih=600&scr_x=0&scr_y=0&eid=21066435%2C21067496&oid=2&pvsid=1545359598998615&pem=489&tmod=635&ref=https%3A%2F%2Fnewsnexttamil.wpcomstaging.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1360%2C0%2C1360%2C728%2C1360%2C600&vis=1&rsz=%7C%7CoeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&ifi=4&uci=a!4&btvi=1&fsb=1&xpc=fK0w21ClKk&p=https%3A//newsnexttamil.wpcomstaging.com&dtd=46

இதில் 4,59,242 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில் 2,24,000 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மீதம் 51 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர்.

இதனால் மனமுடைந்த மாணவர்கள் 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் இறங்கின. கொரோனா சூழலை கணக்கில் கொண்டு அரசு முடிவு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதையடுத்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

2020-2021 கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்வு தான் மிகவும் அவசியமானது. வரும் ஏப்ரல் மாதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க தோல்வி அடைந்த அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களான 35 மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி வழங்கப்படும்.

வருங்காலத்தில் மாணவர்கள் கடினமாக உழைத்து தேர்ச்சி பெற வேண்டும். அரசின் உதவியை எதிர்பார்க்கக்கூடாது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: Mic Mohan: ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மைக் மோகன்