Meendum Manjapai: மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்!!

meendum manjapai
மீண்டும் மஞ்சப்பை

Meendum Manjapai: ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கொரோனா பரவும் சூழல் கருதி தடையை நடைமுறைப்படுத்தும் வகையில் தேக்கம் ஏற்பட்டது. தற்போதைய தமிழ்நாடு அரசு இத்தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த மிகவும் தீவிரமாகப் பணிகளைத் துவங்கியுள்ளது.

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரையின் நோக்கம்.

தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு நாளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு (பைகள் உட்பட) மாற்றுப் பொருட்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் விளக்கப்படக் கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக சென்னை-5, வாலாஜா சாலையில் அமைந்துள்ள “கலைவாணர் அரங்கத்தில்” வைக்கப்பட உள்ளது.

ஆகையால், பொதுமக்களாகிய தாங்கள் பிளாஸ்டிக் மாற்றுப்பொருட்களுக்கான கண்காட்சியை 23-ந்தேதி அன்று மாலை 7 மணி வரை கண்டுகளித்து அதனை தங்களுடைய வாழ்விலும் உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: Caught on Cam: இளைஞரை 120 அடி உயரத்திற்கு தூக்கிச்சென்ற பட்டம்