இனி தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் வேண்டாம் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி போட்டுகொள்ளுவது மிக அவசியம் என்று அரசு மக்களுக்கு வலியுறுத்துகிறது.கொரோனா 3 ம் அலை வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் அதனால் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் செயலியில் முன்பதிவு செய்தால் தான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியும் என்ற விதியில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் அட்டையை காட்டி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.ஆனால் தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆதார் அவசியம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்களுக்கு 18 வயது நிரம்பி இருந்தால் போதுமானது. நேரடியாக மையத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.