அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது- தமிழக அரசு

கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர் பேறுகால விடுப்பில் சென்றால் வீட்டு வாடகை படி வழங்கப்படாது.

அரசு பணியில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980 ஆண்டு முதல் 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு இருந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா இதை 6 மாதமாக உயர்த்தினார். இதன்பிறகு பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது.

இந்த சூழலில் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் 9 மாதமாக உள்ள பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கர்ப்பிணி பெண்ணாக இருக்கும் அரசு ஊழியர்கள் பேறுகால விடுப்பில் சென்றால், அவர்களுக்கு வீட்டு வாடகை படி வழங்கப்படாது என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல்: ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் நடராஜனுக்கு கொரோனா உறுதி