தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு ?

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
இந்நிலையில்,பேருந்துக் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம், போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதால், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுமா என, கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அவர்,பேருந்துக் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை.

நிதிச்சுமை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களின் சேவைக்காகச் செயல்படுவோம். இந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை புதிய பொலிவுடன் இனி செயல்படும்.

பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது.மேலும் வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.