இமாச்சல் பிரதேசத்தில் பயங்கர நிலச்சரிவு !

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூர் மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணி இன்று அதிகாலை தொடங்கியது, இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பேருந்துகள்,மற்ற வாகனங்கள் நிலச்சரிவில் சிக்கி புதைந்து காணப்படுகின்றன.இந்த விபத்து குறித்து கூறும்போது ,நேற்று மதியம் 12.45 மணியளவில் மலைப்பகுதியில் இருந்து பெரிய பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததையும் நேரில் பார்த்தவர்கள் கூறியது.

மேலும் இதில் 50க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து உள்பட பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளது.

இது குறித்து அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் கூறுகையில், இடிபாடுகளுக்குள் 60 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்திய அரசின் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தெரிவித்தார்.