பெண்கள் கிரிக்கெட்டுக்கு… நீட்டா அம்பானி ஆதரவு

பெண்கள் கிரிக்கெட்டுக்கு நீட்டா அம்பானி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான ‘டுவென்டி-20’ சாலஞ்ச் தொடர் சார்ஜாவில் நாளை துவங்குகிறது. இதற்கு ஜியோ சார்ந்த கல்வி மற்றும் ஸ்போர்ட்ஸ் அமைப்பு ஸ்பான்சர் செய்கிறது.

இதுகுறித்து ரிலையன்ஸ் அமைப்பின் நிறுவனர், தலைவர் நீட்டா அம்பானி கூறியது: இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் திறமை, தகுதி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஐ.சி.சி., தொடர்களில் இந்திய பெண்கள் அணியினர் சிறப்பான திறமை வெளிப்படுத்தி, தேசத்திற்கு பெருமை சேர்த்தனர்.

தற்போது வீராங்கனைகளுக்கு தேவையான பயிற்சி வசதிகள், கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவது தான் முதல் நோக்கம். அஞ்சும் சோப்ரா, மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், பூனம் உள்ளிட்டோர் ‘ரோல் மாடலாக’ திகழ்கின்றனர். தற்போது இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் வகையில் முதல் முயற்சியாக ‘டுவென்டி-20’ சாலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. இதற்காக பி.சி.சி.ஐ.,க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய வீராங்கனைகளின் எதிர்கால பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். ‘டுவென்டி-20’ சாலஞ்ச் தொடருக்கு எனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.