நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க தடையில்லை

சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை, எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிய, நிரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான, ரூ.1,350 கோடி மதிப்புள்ள, 2,300 கிலோ தங்க, வைர நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு என்ற ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது. நாடுகடத்தப்பட்டால் நீரவ் மோடி மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என இந்திய அரசு உறுதியளித்துள்ளது.

இதனை நீதிமன்றம் ஏற்கிறது. சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நீரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை என பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.