மாற்றம் பெரும் ரேஷன் கடைகள் தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கப்பட்டு ஸ்டாலின் முதல்வரானார்.மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு அமல் படுத்திவருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் 6,970 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வாடகை கட்டடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் இயங்க ஏதுவாக முறையான இடங்களை கண்டுபிடித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூட்டுறவு சங்கபதிவாளர் சண்முகசுந்தரம் மண்டல இணை பதிவாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.