TN schools: பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு

education-news-10-11-12-public-exam
பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

TN schools: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளில் சில மாதங்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.

பெரும்பாலான நாட்கள் ஆன்லைன் வழி வகுப்புகளே நடந்தன. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் இரண்டு ஆண்டுகளாக எந்தத் தேர்வும் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

இதன் காரணமாக, கடந்த 1-ம் தேதி முதல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, விரைவில் பாடங்களை நடத்தி முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரியில் அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு, நாளை மறுநாள் மீண்டும் தொடங்க உள்ளது.

இதற்காக, பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறை நடத்தும் திருப்புதல் தேர்வுக்கு முதல் முறையாக, அரசு தேர்வுத் துறை வழியே மாநில அளவில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்பட உள்ளது.

இந்தத் தேர்வை, தேர்வுத் துறையின் அனைத்து வகை கட்டுப்பாடுகளுடன் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் எப்படி நடத்தப்படுமோ, அது போன்று அனைத்து கட்டுப்பாடுகளுடன் திருப்புதல் தேர்வை நடத்தும்படி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிந்ததும், விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளில் மதிப்பீடு செய்யக்கூடாது. முதன்மைக் கல்வி அலுவலக அறிவுறுத்தல்படி, விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: tips to get clear skin : தெளிவான சருமம் பெற !